இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 48 ஆயிரத்து 878 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 4 இலட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் 2 கோடியே 94 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 5 இலட்சத்து 29 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில், நேற்று ஒரேநாளில் 991 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 99 ஆயிரத்தை கடந்துள்ளது.