கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 47 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
31 பெண்களும் 16 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்தப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 77ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் மேலும் ஆயிரத்து 864 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 59 ஆயிரத்து 89 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 2 இலட்சத்து 25 ஆயிரத்து 952 பேர் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 30 ஆயிரத்து 107 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.