இலங்கையில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, 3 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் கண்டி, நுவரெலியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 4 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.