விவசாயிகளின் நலன் மீது, இந்தியா வைத்துள்ள அக்கறையை பிரதிபலிக்கும் வகையில் மடேரா தீர்மானம் அமைந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஜி-20 மாநாடு குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இத்தாலியில் நடத்த ஜி-20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கான மாநாட்டில், உணவு பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதற்கு என் பாராட்டுகள்.
சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலன், உள்ளுர் உணவு கலாசாரங்களை ஊக்குவிக்க முடிவெட்டப்பட்டது. அதோடு வேளாண் பன்முகத்தன்மையை அங்கீகரித்தல் உள்ளிட்டவற்றின்மீது இந்தியா வைத்துள்ள அக்கறையை பிரதிபலிக்கும் வகையில் மடேரா தீர்மானம் அமைந்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.