நாட்டில் நேற்று மாத்திரம் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 520 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, நேற்றைய தினம் (புதன்கிழமை) ஒரு இலட்சத்து 70 ஆயிரத்து 995 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
91 ஆயிரத்து 759 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸும் 79 ஆயிரத்து 236 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், 17 இலட்சத்து 49 ஆயிரத்து 500 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸும் 6 இலட்சத்து 84 ஆயிரத்து 352 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் 2 ஆயிரத்து 523 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், 3 இலட்சத்து 78 ஆயிரத்து 307 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், நாட்டில் மேலும் 2 பேருக்கு நேற்று ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டது.
இதனையடுத்து, நாட்டில் ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 427ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.