அருவி திரைப்படம் மூலம் கவனம் பெற்ற நடிகை அதிதி பாலன் தனது சினிமா அனுவங்கள் குறித்தும், நான்கு வருட காலமாக சினிமாவில் நடிக்காதது குறித்தும் மனம் திறந்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள செவ்வியில், ‘அருவி படத்திற்கு பிறகு நான் எடுத்துக்கொண்ட இடைவெளி நீண்டதாக தோன்றலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை இது சினிமாவைப் புரிந்துகொள்வதற்காக நான் தேர்ந்தெடுத்த ஒரு வழி.
கடந்த சில ஆண்டுகளாக இந்த இடைவெளியில் நன்றாகவே திரைத்துறையைப் புரிந்துகொண்டேன். கோல்டு கேஸ் திரைப்படத்திற்கு பிறகு மலையாளத்தில் படவேட்டு என்ற படத்திலும், தமிழில் நவராசா என்ற படத்திலும் தெலுங்கில் சகுந்தலம் என்ற படத்திலும் நடித்துள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.