உயர் கல்விக்காக வௌிநாடு செல்லும் மாணவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை www.army.lk/covid19 என்ற இணைய முகவரிக்கு பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.