பின்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 46ஆயிரம் பேர் மீண்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 98ஆவது நாடாக விளங்கும் பின்லாந்தில் இதுவரை 96ஆயிரத்து 180பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை 973பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 49ஆயிரத்து 207பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 11பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 216பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வித உயிரிழப்பும் பதிவாகவில்லை.