கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின்போது தினசரி பாதிப்பு அளவு 50,000 முதல் 1 இலட்சம் என்ற அளவில் இருக்க வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட விஞ்ஞானிகள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதிய உருமாறிய கொரோனா வகைகள், நோய் எதிர்ப்பு திறன் மற்றும் தடுப்பூசியின் செயல் திறன் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மூன்றாவது அலையின் பாதிப்பு தொடர்பாக இந்த குழு கணித்துள்ளது.
மேலும் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தீவிரப்படுத்தினால், கொரோனாவின் 3 ஆம் அல்லது 4ஆம் அலையில் பாரிய பாதிப்பு இருக்காது என அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அதாவது 3வது அலை பாதிப்பின்போது பெரும்பாலும் தினசரி பாதிப்பு அளவு 50,000 முதல் 1 இலட்சம் என்ற அளவிலேயே இருக்க வாய்ப்புள்ளது எனவும் குறித்த குழு குறிப்பிட்டுள்ளது.
ஆனாலும் 3வது அலை பாதிப்பு எதிர்வரும் ஒக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் உச்சம் அடைய வாய்ப்புள்ளது. ஆகவே சுகாதார நடைமுறைகளை அனைவரும் இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அக்குழு வலியுறுத்தியுள்ளது.