கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனையின் 3 ஆம் கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டுள்ளது.
நேற்று (சனிக்கிழமை) மருதமுனையின் பொதுநூலக வீதி மற்றும் அல்-மனார் வீதியின் ஒருபகுதி ஆகியவற்றில் பீ.சீ.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை மருதமுனைப் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஒரு வார காலத்திற்கு ஆள் நடமாட்டக் கட்டுப்பாட்டை அமுல்ப்படுத்துவதென கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தலைமையில் நடைபெற்ற சுகாதாரத்துறையினர் உடனான கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
ஆனாலும் மருதமுனை 3 பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையை கவனத்தில் கொண்டு, சுகாதார நிபந்தனைகளுடன் குறித்த பகுதி நேற்று முதல் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.