ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ள நிலையில், அவருக்கு பொருளாதார அபிவிருத்தி மற்றும் நிதி இராஜாங்க அமைச்சுக்களை வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி, மற்றும் நகர மேம்பாட்டு வேலைத் திட்டங்களையும் இவரின் அமைச்சுக்குக் கீழ் கொண்டுவரப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ள இவர், அன்றைய தினமே அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களை பொறுப்பேற்பார் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக பதவி வகித்த இவரின், தற்போதைய அரசியல் வருகையானது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.