பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் இருந்து 85 பேருடன் சென்ற இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதாக அந்நாட்டு இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
சுலு மாகாணத்தின் ஜோலோ தீவில் தரையிறங்க முயன்றபோது சி -130 என்ற குறித்த விமானம் விபத்துக்குள்ளானதாக ஜெனரல் சிரிலிட்டோ சோபேஜனா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூறினார்.
குறித்த விபத்தில் சிக்கியவர்களில் 40 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு பணிகள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமானம் ஓடுபாதையைத் தவறவிட்ட காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் அனைவரது உயிரையும் காப்பாற்ற முடியும் என தாங்கள் நம்புவதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.