இந்தியாவில் புதிதாக மேலும் 43,071 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில் 43,071 பேருக்கு இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த தொற்று பாதிப்பு நேற்றைய நாளினை விட 2 சதவீதம் இன்று குறைந்துள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 52,299 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 2.34 சதவிகிதமாக உள்ளது.
இந்நிலையில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 350 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 955 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.