மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவு குறைவடைந் துள்ளது. இந்த நிலையில் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ள மையினால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நிலவரப்படி, மேட்டூர் அணை நீர்மட்டம் 82.09 அடியிலிருந்து 80.85 அடியாக சரிந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் நேற்றைய தினம், நீர்வரத்து 836 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 616 கன அடியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அணையில் இருந்தே காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதுடன் அணையில் தற்போது 44 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.