கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 323 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 33 ஆயிரத்து 317 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரையில் 2 இலட்சத்து 62 ஆயிரத்து 795 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேநேரம், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.