இந்தியாவில் கொரோனா தொற்றினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 40 ஆயிரத்து 387 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 5 இலட்சத்து 84 ஆயிரத்தை கடந்துள்ளது.
இவர்களில் 2 கோடியே 96 இலட்சத்து 92 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 4 இலட்சத்து 89 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் நேற்று ஒரேநாளில் 743 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 2 ஆயிரத்து 758 ஆக அதிகரித்துள்ளது.