மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜுலை மாதம் 8 ஆம் திகதி அரசுமுறைப் பயணமாக ரஷ்யா செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் விரிவான பயணத்திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படவுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின்போது, ரஷ்யா, இந்தியா இடையேயான பல புதிய ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கமான அனுசக்தி, ஆயுத ஒப்பந்தங்களை தவிர வேளாண் தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ், நானோடெக் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.