அர்ஜுன் அலோசியிற்கு சொந்தமான W.M.மென்டீஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய, அமைச்சரவை இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பிட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தை இரத்து செய்வதற்கான ஜனாதிபதியின் முடிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மதுபான உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க நிறுவனம் கோரிய பல கோரிக்கைகளை கருத்தில் கொண்டு கடுமையான நிபந்தனைகளின் கீழ் அனுமதி வழங்கப்பட்டது.
அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தை செலுத்தத் தவறியமையால், 2018 ஆம் ஆண்டு மென்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்திக்கான அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த நிறுவனத்திற்கு மீண்டும் அனுமதிப் பத்திரத்தை வழங்கியமையின் ஊடாக, அரசாங்கம் மத்திய வங்கி முறி மோசடிகக்காரர்களுடன் உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளதா என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அத்துடன், குறித்த நிறுவனத்திற்கு பல்வேறு வரிச் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.