உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 40இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 18கோடியே 49இலட்சத்து 31ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 16கோடியே 92இலட்சத்து 99ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை எதிர்கொண்ட முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.
இதற்கு அடுத்தப்படியாக அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நாடுகளாக இந்தியா, பிரேஸில், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.