இந்தியா உள்ளிட்ட 3 நாடுகள் மீது விதித்த பயணத்தடையை ஜெர்மனி அரசு நீக்கியுள்ளது.
இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இங்கிலாந்து, போர்த்துக்கல் மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளை சேர்ந்தவர்கள் மற்றும் அந்நாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தற்போது குறைவடைந்துள்ள நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.