அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் வகையில் மேலும் ஒரு வாரத்திற்கு முடக்க நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மிகவும் வேகமாக பரவும் டெல்டா வகையை எதிர்த்துப் போராடுவதால் குறித்த கடினமான முடிவை எடுத்ததாக நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் கூறியுள்ளது.
ஜூன் 26 அன்று மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவிற்காக மக்கள் வெளியேறியமை காரணமாக புதிய கொத்தணிகள் உருவாகின.
இந்நிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீக்கப்படவிருந்த கட்டுப்பாடுகள், ஜூலை 16 வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.