இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 45 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி, 15 பெண்களும் 30 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 313ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 934 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 67ஆயிரத்து 433 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 2 இலட்சத்து 36 ஆயிரத்து 659 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 27 ஆயிரத்து 461 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.