அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறைகளுக்கு தீர்வு காணும் வகையில் நியூயோர்க்கில் பேரிடர் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவில் கையெழுத்திட்டு கருத்து தெரிவித்த ஆளுநர் அண்ட்ரூ கியூமோ, ஜூலை 4 ஆம் திகதி விடுமுறை வார இறுதியில் மாநிலத்தில் 51 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றதாக கூறினார்.
கடந்த வார இறுதியில் கிட்டத்தட்ட 200 பேர் உட்பட, நாடு முழுவதும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் கியூமோவின் பேரிடர் அவசர நிலைமை அறிவிப்பு துப்பாக்கி வன்முறையை ஒரு பொது சுகாதார நெருக்கடி என விவரிக்கிறது.
குறிப்பாக சமீபத்திய எண்ணைக்கையைப் பார்த்தால், கொரோனாவை விட அதிகமான மக்கள் இப்போது துப்பாக்கி வன்முறை காரணமாக இறந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.