வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று(புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தின் ஏற்பாட்டில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா காமினி மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்ற தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை வரை இடம்பெற்றிருந்தது.
இதில் அதிகளவான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தடுப்பூசியினை செலுத்திக்கொண்டனர். முதற்கட்டமாக ஆயிரம் தடுப்பூசிகளின் முதல்டோஸ் இன்றைய தினம் பொதுமக்களிற்கு செலுத்தப்படவுள்ளன.
குறித்த நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மகேந்திரன், பிரதேச செயலாளர் நா.கமலதாசன், இராணுவ அதிகாரிகள், வைத்தியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.