பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் தடுப்பூசி உற்பத்தி, விநியோகம், உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க கூட்டணி அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இருப்பினும் இந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு முறைக்கூட மத்திய அமைச்சரவையில் மாற்றமோ, விரிவாக்கமோ செய்யப்படவில்லை.
இந்த நிலையில், மத்திய அமைச்சரவை நேற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்துஇடம்பெறுகிற முதலாவது கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.