இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 45 ஆயிரத்து 675 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 7 இலட்சத்து 8 ஆயிரத்தை கடந்துள்ளது.
இவர்களில் 2 கோடியே 98 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 4 இலட்சத்து 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதேநேரம் நேற்று 817 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 5 ஆயிரத்தை கடந்துள்ளது.