நாட்டில் இதுவரை 33 இலட்சத்து 96 ஆயிரத்து 167 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, நேற்றைய தினத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 750 பேருக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 35 ஆயிரத்து 893 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை 3 இலட்சத்து 84 ஆயிரத்து 374 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 795 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் 14 ஆயிரத்து 452 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட ஃபைஸர் தடுப்பூசி வேலைத்திட்டத்திற்கு அமைய நேற்று 2 ஆயிரத்து 171 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸாக ஃபைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.