தமிழகத்தில் கொரோனா காலக்கட்டத்தில் 100 இற்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், ‘தமிழகத்தில் கொரோனாவினால் 93 குழந்தைகள் தாய்-தந்தை இருவரையும் இழந்துள்ளனர். அதேநேரம் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 593 ஆக காணப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா காலக்கட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. அதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்கான விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.