இந்தியாவில் அதிக வெப்பம், மற்றும் குளிர் காரணமாக வருடந்தோறும் 7 இலட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
பருவநிலை மாற்றம் குறித்து அவுஸ்ரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வினை அடிப்படையாகக் கொண்டே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த ஆய்வில், உலகமெங்கும் ஆண்டுக்கு 50 இலட்சத்திற்கும் அதிகமான இறப்புகளுக்கு அசாதாரணமான வெப்பநிலை காரணம் ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2000 ஆயிரம் முதல் 2019ஆம் ஆண்டுவரை எல்லா பிராந்தியங்களிலும், வெப்பநிலை அதிகரித்து வந்துள்ளதகாவும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
இது உலக வெப்பமயமாதல், எதிர்காலத்தில் அதிகளவிலான உயிரிழப்புகளுக்கு காரணமாகும் என்பதை காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் அசாதாரண குளிரால் ஆண்டுக்கு 6 இலட்சத்து 55 ஆயிரத்து 400 பேர் இறப்பதாகவும், அதிக வெப்பதால் 83 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பதாகவும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.