மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் தொடர்ச்சியாக பெய்யும் மழை காரணமாக பெரும்பாலான நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையிலேயே கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில், நீர்மட்டம் அதிகரித்தமையினால் இன்று காலை மேலும் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டன.
இதனால் சென்கிளயர் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.