நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சுமார் 4 இலட்சத்து 75 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை மின் துண்டிப்பு குறித்து 12 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் நிலைமையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
காலி, மாத்தறை, கிரிபத்கொடை, கண்டி, பெராதெனிய, குளியாப்பிட்டி, குருணாகல், களனி, இரத்மலாலை, சிலாபம் ஆகிய இடங்களில் இவ்வாறு மின்சாரத் தடைப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை மற்றும் காற்று காரணமாக அனர்த்த சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
மரங்கள் வீழ்வு, மண்மேடு சரிவு போன்ற காரணங்களால் சில பாதைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதோடு, வீடுகளுக்கும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.