நிதி நிறுவனங்கள் வாகனங்களை பறிமுதல் செய்வது தொடர்பான முறைப்பாடுகளை விசாரணைக்கு உட்படுத்த, தனிப் பிரிவு ஒன்றினை அமைக்க வேண்டும் என அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
ரிசர்வ் வங்கி எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கடன் தவணை செலுத்துதலை ஒத்தி வைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் நிதி நிறுவனங்கள், கடன் செலுத்தாத வாகன உரிமையாளர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது என ஓ.பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இவ்விடயம் தொடர்பாக மக்களினால் அளிக்கப்படும் முறைப்பாடுகளை பொலிஸார் கவனத்தில் கொள்வதில்லை என்பதுடன் பொலிஸ் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள், நிதி நிறுவனங்களுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.