எத்தியோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் அபி அகமதுவின் கட்சி அதிக இடங்களை வென்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அபியின் கட்சி 436 நாடாளுமன்ற இடங்களில் 410 இடங்களை வென்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் அவர் மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பல தசாப்த கால அடக்குமுறை ஆட்சியின் பின்னர் நாட்டின் முதல் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலாக ஜூன் 21 வாக்கெடுப்பு அமைந்தது என்றும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
எவ்வாறாயினும் டைக்ரேயின் வடக்கு பிராந்தியத்தில் போர், இன வன்முறை என்பன தேர்தலுக்கு சவாலாக அமைந்தன.
குறிப்பாக எத்தியோப்பியாவின் 10 பிராந்தியங்களில் மூன்றில் வாக்கெடுப்பு நடைபெறவில்லை என அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.