அவுஸ்ரேலியாவில் கொரோனா தொற்றினால் இந்த ஆண்டில் முதல் மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை டெல்டா மாறுபாட்டினை எதிர்த்து போராடும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 77 புதிய நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடினமான முடக்கத்தான் கீழ் உள்ள சிட்னி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலேயே இந்த எண்ணிக்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாநில பிரதமர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறினார்.
இந்த அதிகரிப்பை அடுத்து சிட்னி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மேலும் மூன்று வாரங்களுக்கு முடக்க கட்டுப்பாடு நீடிக்கப்படுவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்தி பல வளர்ந்த நாடுகளை விட மிகச் சிறப்பாக செயற்பட்டது.
இதன் காரணமாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து 31,000 க்கும் அதிகமான நோயாளிகளும் 911 இறப்புகளுமே அங்கு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.