சபரிமலை ஐயப்பன் ஆலய நடை ஆடி மாத பூஜைக்காக, எதிர்வரும் 16ஆம் திகதி திறக்கப்படுகிறது.
இதன்போது இணையத்தினூடான முன்பதிவின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் 5 ஆயிரம் பக்தர்கள் குறித்த பூஜையில் பங்கு கொள்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, சபரிமலை ஐயப்பன் ஆலய நடை ஆடி மாத பூஜைக்காக எதிர்வரும் 16ஆம் திகதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து 21ஆம் திகதி வரை பூஜைகள் நடைபெறும்.
மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்.நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தி கொண்டமைக்கான இணைய சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.
இந்த சான்றிதழ்கள் அல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.