விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே பார்டி வெற்றிபெற்று மகுடம் சூடியுள்ளார்.
இரண்டாவது முறையாக1980 ஆம் ஆண்டில் கூலாகாங் வெற்றிபெற்ற பின்னர் விம்பிள்டனை வென்ற முதல் அவுஸ்ரேலிய பெண்மணி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை உலகின் முதல்நிலை வீராங்கனையான அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே பார்டி எதிர்கொண்டார்.
இப்போட்டியின் முதல் செட்டை 6-3 என ஆஷ்லே பார்டி கைப்பற்ற, டை பிரேக் வரை நீண்ட இரண்டாவது செட்டை 7-6 என கரோலினா பிளிஸ்கோவா கைப்பற்றினார்.
இதனால் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை 6-3 என மீண்டும் கைப்பற்றி ஆஷ்லே பார்டி சம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.