கொரோனா தொற்று பரவாமல் இருக்க, சில இடங்களில் கட்டாயம் முக்கவசம் அணிய வேண்டும் என வேல்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை நிலை ஒன்றிலிருந்து பூஜ்ஜியத்திற்கு நகர்ந்தால், பொதுப் போக்குவரத்து, சுகாதார மற்றும் சமூக இடைவெளி என்பன தொடர்ந்தும் கட்டாயமாக பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கடைகளில் முக்கவசம் அணிய கட்டாயப்படுத்துவது குறித்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் வேல்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் ஜூலை 19 முதல் பெரும்பாலான இடங்களில் முக்கவசம் அணிய வேண்டிய தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேல்ஸில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் வகுப்பறையில் மாணவர்கள் முக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் எதிர்வரும் செப்டம்பர் முதல் பரிந்துரைக்கப்படாது என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.