இங்கிலாந்தில் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட வின்சென்ட் சான் (Vincent Chan) பணிபுரிந்த சிறுவர் பாடசாலை நடத்திய நிறுவனத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றன.
வடக்கு லண்டனில் உள்ள ‘பிரைட் ஹொரைசன்ஸ்’ (Bright Horizons) சிறுவர் பாடசாலை கிளையில் பணிபுரிந்தபோது, மூன்று மற்றும் நான்கு வயது சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததை 45 வயதான வின்சென்ட் சான் கடந்த ஆண்டு ஒப்புக்கொண்டார்.
அதை அடுத்து அந்த சிறுவர் பாடசாலை தற்போது மூடப்பட்டுவிட்டது.
பாலியல் ஊடுருவல், தகாத முறையில் தொடுதல் மற்றும் குழந்தைகளின் தவறான படங்களை எடுத்தல் உட்பட 26 பாலியல் குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் லீ டே (Leigh Day) என்ற சட்ட நிறுவனம், 2017 முதல் 2024 வரை சான் அங்கு பணிபுரிந்தபோது பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் ‘பிரைட் ஹொரைசன்ஸ் ஃபேமிலி சொல்யூஷன்ஸ் லிமிடெட்’ (Bright Horizons Family Solutions Limited) நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது.
சுமார் 300-க்கும் மேற்பட்ட சிறுவர் பாடசாலைகளை நடத்தும் இந்த நிறுவனத்திற்கு எதிராக இதுவரை 46 குடும்பங்கள் இணைந்து வழக்கு தொடுத்துள்ள.
இதேவேளை, இந்தக் குற்றங்களால் தாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், தங்களது பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்ய நிபுணர் குழுவை நியமித்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சிறுவர் பாடசாலைக்கு வெளியே தான் செய்த மேலும் 30 குற்றங்களை சந்தேகநபரான சான் ஒப்புக்கொண்டார்.
அவர் 2007 முதல் 2017 வரை வடக்கு லண்டனில் உள்ள ஒரு சிறுவர் பாடசாலையில் பணிபுரிந்துள்ள நிலையில் 2017-ல் வகுப்பறையில் அவர் அநாகரீகமாக நடந்துகொண்ட வீடியோக்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து 2011 முதல் 2023 வரை அவர் தொடர்ச்சியாக பல மறைமுகப் பாலியல் அத்துமீறல்களில் (Voyeurism) ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
இதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து
தான் செய்த 56 குற்றங்களையும் ஒப்புக்கொண்டுள்ளதுடன் வின்சென்ட் சானுக்கான தண்டனை எதிர்வரும் பிப்ரவரி 12-ம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.















