மன்னார், நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 17 கிலோ கிராம் ஆமை இறைச்சி, 39 ஆமை முட்டைகள் மற்றும் ஒரு டிங்கி படகுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மன்னார், நச்சிக்குடா பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் 26 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள்.
மேலும், சந்தேக நபர்கள், ஆமை இறைச்சி, ஆமை முட்டைகள் மற்றும் டிங்கி படகு ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி வனவிலங்கு அலுவலகத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












