சோமாலியாவின் தலைநகரில் அரசாங்க காவலர் ஒருவரை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டு வெடிப்பில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற குறித்த தாக்குதலுக்கு அல்-கைதாவுடன் இணைந்த போராளிக்குழுவான அல்-ஷபாப் போராளிகள் உரிமை கோரியுள்ளனர்.
அரசாங்கத்தை தூக்கியெறிந்து இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கடுமையான விளக்கத்தை விதிக்க விரும்பும் குறித்த குழு, இதுபோன்ற குண்டுவெடிப்புகளை அடிக்கடி நடத்துகிறது.
தாக்குதலில் இருந்து தப்பிய மூத்த பொலிஸ் அதிகாரி ஃபர்ஹான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.