சீன நிறுவனங்களை தடுப்பு பட்டியலில் சேர்ப்பது சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக விதிகளின் கடுமையான மீறல் என சீனாவின் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக 23 சீன நிறுவனங்களை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் வர்த்தக நிறுவன தடுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
இந்த விடயம் குறித்து விமர்சித்துள்ள சீனாவின் வர்த்தக அமைச்சு, சீன நிறுவனங்களை நியாயமற்ற முறையில் அடக்கும் செயற்பாடு இது என்றும் கூறியுள்ளது.
அதேநேரம் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை சீன அரசாங்கம் எடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.