கொரோனா தொற்றின் அல்பா மற்றும் பீட்டா வகைகளால் பாதிக்கப்பட்டு 90 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பெல்ஜிய மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
SARS-CoV-2 இன் இரண்டு வகைகளைக் கொண்ட ஒருவர் உயிரிழந்த முதல் சம்பவம் இது என்றும் ஐரோப்பிய நுண்ணுயிரியல் மற்றும் தொற்று நோய்கள் பிரிவு தெரிவித்துள்ளது.
90 வயதான பெண் மார்ச் மாதம் பெல்ஜிய நகரமான அல்ஸ்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
நாளுக்கு நாள் சுவாச பிரச்சினை அதிகரித்ததை அடுத்தே அவர் உயிரிழந்தார் என்றும் மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.