இலங்கைக்கு இன்றைய தினம் கொண்டுவரப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளில் 5 இலட்சம் கம்பஹா மாவட்டத்திற்கும் 3 இலட்சம் களுத்துறை மாவட்டத்திற்கும் வழங்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அத்துடன் நுவரெலியா, பதுளை, மாத்தளை, அநுராதபுரம், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நாட்டிற்கு மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.