தமிழக மக்கள் பிரிவினைவாதிகளை ஆதரிக்க மாட்டார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘தமிழகத்தை பிரிக்கும் முயற்சி வெற்றி பெறாது. பா.ஜ.கவின் பிரிவினைவாத போக்கை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.
அதேபோன்று திருச்சி, கோவை, மதுரையை இரண்டாவது தலைநகரமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கு மிகுந்த பொருட் செலவு ஏற்படும்.
தமிழ்நாட்டு அரசிடம் போதிய நிதிவருவாய் இல்லை. எனவே 2ஆவது தலைநகரம் அமைப்பதற்கு சாத்தியம் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.