இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 37 ஆயிரத்து 676 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 8 இலட்சத்து 73 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 7 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 4 இலட்சத்து 57 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் நேற்று ஒரேநாளில் 720 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 8 ஆயிரத்தை கடந்துள்ளது.