ஜூலை 19 ஆம் திகதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் மக்கள் எச்சரிக்கையாகவும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது ஒரு நாளைக்கு சுமார் 30 ஆயிரமாக காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் மேலும் உயரும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதேவேளை புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் இறப்பு ஆகியன தடுப்பூசி திட்டத்தை பலவீனப்படுத்தியுள்ளது என்றும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்தார்.
ஆகவே தொற்று இன்னும் முடிவடையவில்லை என சுட்டிக்காட்டிய பிரதமர் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஜூலை 19 இல் இருந்து சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்கும் திட்டம் குறித்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று உறுதிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.