மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை, இன்றும் (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில், கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆசிரியர்களுக்கே, இன்று காலை முதல் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு- மகாஜனக்கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில், கொரோனா தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரனின் வழிகாட்டலில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதனின் தலைமையில் இந்த தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் இன்றைய தினம், 1700 ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.