இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 30 ஆயிரத்து 827 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 9 இலட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் நேற்று 546 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 10 ஆயிரத்தை கடந்துள்ளது.