அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் இன்று (பதன்கிழைமை) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவைகளுக்காக 500 பேருந்துகள் இன்று முதல் இயங்கும் என்று இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
அதேபோன்று தனியார் பேருந்துகளும் இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான சேவையை ஆரம்பிக்கும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி வரையில் 4 ரயில் சேவைகளும் கோட்டையிலிருந்து ரம்புக்கனை, மஹவ, சிலாபம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் 2 ரயில்களும் இயங்கவுள்ளன.
மருதானை மற்றும் காலிக்கு இடையில் இரண்டு ரயில்கள் இயங்கவுள்ளதாகவும் மருதானை – வெலியத்த ஆகிய நகரங்களுக்கு இடையில் ஒரு ரயில் இயங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.