நாட்டின் மொத்த சனத்தொகையில் 36 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (புதள்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், மொத்த சனத்தொகையில் 13 சதவீதமானோருக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளதாக அந்தப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேநேரம், கொழும்பு மாவட்டத்தில் 70 சதவீதமானோருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 56 சதவீதமானோருக்கும் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.